தனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
தமிழகத்தில் பரவலாக கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது வீடுகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அவரது எல்டாம்ஸ் சாலை வீட்டின் முன் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளது. இந்த நோட்டீஸில் ’மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் கமலஹாசனுக்கு கொரோனா நோய் தொற்று பரவியதாக வதந்தி கிளம்பியது. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தனிமை என தவறான தகவல் பரவுகிறது. இது அந்த மாதிரி ஸ்டிக்கர் அல்ல. நாங்களே பாதுகாப்பாக இருக்கிறோம். மற்றவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று மாநகராட்சி ஒட்டும் ஸ்டிக்கர்.. எனவே வதந்திகள் பரப்பாதீர்கள்’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது
இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி கமல் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது