கமல் கட்சியின் கொடி திடீர் மாற்றமா?

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை ஆரம்பித்த கமல் அறிமுகம் செய்த கட்சியின் கொடி தமிழர் பாசறை கொடியில் உள்ள சின்னத்தை போன்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி கட்சிக்கொடியை மாற்றவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் முன் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல் இதுகுறித்து விளக்கம் அளித்தார். எங்கள் கட்சியின் சின்னமும், தமிழர் பாசறை அமைப்பின் சின்னமும் ஒரே மாதிரியாக இருப்பதை அடுத்து அந்த அமைப்பினர்களே முன்வந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறினார்.

இதுகுறித்து தமிழா் பாசரை செம்பூா் மும்பை அமைப்பின் நிர்வாகி கூறுகையில், எங்களது அமைப்பின் சின்னமும், கமல்ஹாசனின் கட்சியின் சின்னமும் ஒரே மாதிரியாக உள்ளது. இதனால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் எங்கள் அமைப்பு தார்மீக அடிப்படையில் கமல்ஹாசன் அவா்கள் அதே சின்னத்தை பயன்படுத்த நாங்கள் எங்களுக்குள் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். எனவே அவா் அந்த சின்னத்தை பயன்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து கட்சியின் கொடி குறித்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

More News

விஷாலுக்கு கலிபோர்னியாவில் நடக்கும் சிகிச்சை என்ன?

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிப்பு பணிகள் காரணமாக பிசியாக இருந்த நடிகர் விஷால், சில நாட்கள் ஓய்வுக்கு செல்வதாகவும்,

ஸ்ரீதேவி மரணம் குறித்து தடயவியல் சோதனை அறிக்கை கூறுவது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு என்ன காரணம் என்பதை மருத்துவரீதியில் கண்டுபிடிக்க துபாயில் தடயவியல் சோதனை நடத்தப்பட்டது.

என்னை அரசியலுக்கு வந்தே ஆகணும் என்று முதலில் சொன்னவர் இவர்தான்: கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவரது அரசியல் முடிவுக்கு யார் காரணம் என்பதை கமல் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கூறியுள்ளார்.

ரஜினியை அடுத்து மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்றார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

சிரியாவில் கொத்து கொத்தாக பலியாகும் சின்னஞ்சிறு சிறார்கள்

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தும் முடியவில்லை