'தூங்காவனம்' இயக்குனருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்த கமல்

  • IndiaGlitz, [Saturday,September 12 2015]

கமல்ஹாசன், த்ரிஷா நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய 'தூங்காவனம்' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குபவர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

கமல்ஹாசனின் அடுத்த படம் நகைச்சுவை அம்சம் மிக்கதாக இருக்கும் உருவானது என்றும் இந்த படத்தை இயக்குனர் மெளலி இயக்குவார் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன.. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி மெளலியின் கதை, திரைக்கதையை மட்டுமே கமல்ஹாசன் பயன்படுத்த போவதாகவும், இந்த படத்தை 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா அவர்களே மீண்டும் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீப காலங்களில் ஒரு இயக்குனர் தொடர்ந்து இரண்டு கமல் படங்களை இயக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தின் வசனங்களை கிரேசி மோகன் எழுதுவார் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது மெளலியே வசனங்களையும் எழுதக்கூடும் என்று ஒரு பேச்சு உலவுகிறது.

கமல்ஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கமலை வைத்து 'உத்தம வில்லன்' படத்தைத் தயாரித்து நஷ்டமடைந்த லிங்குசாமி தன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறாராம்.

இந்தப் படம் குறித்த முறையான அறிவிப்பை அதிவிரைவில் எதிர்பார்க்கலாம்.

More News

திப்புசுல்தான் விவகாரம். ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய அரசியல் கட்சி தலைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'திப்பு சுல்தான்' வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானதும், அதற்கு இந்து முன்னணி...

முடிவுக்கு வந்தது ரஜினியின் ஜோக்கர் புகைப்பட பரபரப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி ...

ஆர்யாவின் 'இஞ்சி இடுப்பழகி' சென்சார் தேதி?

இந்த வருடத்தில் மட்டும் ஆர்யா நடித்த 'புறம்போக்கு', 'வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க' மற்றும் 'யட்சன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசாகியுள்ளது...

அஜீத் நடிப்பில் 'பாட்ஷா 2'. சுரேஷ்கிருஷ்ணாவின் ஆசை

நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 90வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

நான்கு நாடுகளில் படமாகிறது 'சிங்கம் 3'

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'பசங்க 2' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...