ஏ.ஆர்.முருகதாஸ் 'ஸ்பைடர்' படத்தில் 'பாகுபலி 2' டெக்னீஷியன்

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ராகுல்ப்ரித்திசிங் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் மற்ற படத்தைவிட அதிகளவு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் VFX சூப்பர்வைசராக கமலக்கண்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவரது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கலை வண்ணத்தில் சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் விரைவில் ரஷ்யாவில் உள்ள அதிநவீன ஸ்டுடியோவில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச ஸ்பை கேரக்டரில் மகேஷ்பாபு, டாக்டர் கேரக்டரில் ராகுல் ப்ரித்திசிங் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.