அமெரிக்காவின் தற்காலிக அதிபரான கமலா ஹாரிஸ்!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட திருமதி. கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்நாட்டின் முதல் பெண் துணைஅதிபர் என்ற மதிப்புக்குரிய பதவியில் இருந்து வருகிறார். அவர் தற்போது அமெரிக்காவின் தற்காலிக அதிபராக பதவி வகித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடல்நலக் குறைபாடு காரணமாக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சிகிச்சைக்காக சென்றபோது அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து கமலா ஹாரிஸ் ஒரு மணிநேரம் மற்றும் 25 நிமிடங்கள் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக பதவி வத்தார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டு இருக்கிறது. மேலும் அதிபர் ஜோ பைடனுக்கு பெருங்குடல் தொடர்பாக பிரச்சனை இருந்ததாகவும் அதற்கு மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் குணமாகும் வரை அதிபர் பதவிக்கான அதிகாரத்தில் கமலா ஹாரிஸ் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.