நானும் அமெரிக்க அதிபராவேன்: கமலா ஹாரீஸ் பேத்தியின் மழலை வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று கடந்த 3 நாட்களுக்கும் மேலாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோபைடன் அவர்கள் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் அவர்களின் வெற்றியும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோபைடனும், துணை அதிபராக கமலா ஹாரீஸும் விரைவில் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் கமலாஹாரீஸ் மருமகள் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் அவரது பேத்திக்கும் நடக்கும் உரையாடல் குறித்து காட்சிகள் உள்ளது
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த உரையாடலில் கமலா ஹாரீஸின் பேத்தி தனது மழலை மொழியில் ’நானும் அமெரிக்காவின் அதிபராக வேண்டும்’ என்று தனது ஆசையை கூறினார். அதைக் கேட்டு பூரித்து போன கமலா ஹாரிஸ் ’உனக்கு 35 வயது ஆகட்டும் அதன்பிறகு அதிபர் ஆகலாம்’ என்று கூறுகிறார் இந்த வீடியோவை லட்சக்கணக்கான பேர் பார்த்து பாட்டிக்கும் பேத்திக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
“You could be president.” pic.twitter.com/akB2Zia2W7
— Meena Harris (@meenaharris) November 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com