சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டி!!! பரபப்பு நிகழ்வு!!!
- IndiaGlitz, [Wednesday,August 12 2020]
அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திவரும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இருகட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்க அரசியலில் தற்போது பிரதான கட்சியாக ஜனநாயகக் கட்சி மாறிவருவதாகவும் கூறப்படுகிறது. அக்கட்சியின் சார்பாக முன்னாள் அதிபராக பதவி வகித்த ஜோ பிடன் தற்போது அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வருகிற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதனால் ஜோ பிடன, ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரை தற்போது ஜோ பிடன் அறிவித்து இருக்கிறார். அதில் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் தற்போது அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். முதலில் துணை அதிபர் வேட்பாளருக்கான தேர்வில் அதிக ஆதரவு இல்லாமல் விலகிக்கொண்ட இவரை தற்போது ஜோ பிடன் முன்னிறுத்தி இருப்பது குறித்து பலரும் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
கமலா ஹாரீஸ் அடிப்படையில் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் தெரிய வந்திருக்கிறது. அவருடைய தாத்தா பி.வி. கோபாலன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பதும் அவருடைய பாட்டி ராஜம் ஒரு பெண் உரிமை போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மகளாக பிறந்த ஷியாமளா சென்னையில் தனது 19 வயது வரையிலும் கல்வி பயின்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது இவர் ஒரு புற்றுநோய் நிபுணராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஷியாமளிவிற்கு பிறந்த கமலா ஹாரீஸ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அடிக்கடி சென்னைக்கு பயணம் செய்பவர் என்றும் கூறப்படுகிறது.
தற்போது கலிபோரினியாவின் ஓக்லேண்ட் பகுதியில் வசித்து வரும் கமலா ஹாரீஸ் ஹார்ட்வோட் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 44 வயதான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செனட் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த டெனால்ட் ஹாரீஸ் என்ற வழக்கறிஞரை இவர் கடந்த 2014 இல் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அதிபர் ஒபாமாவோடு நெருங்கிய நட்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.