ஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் 49 ஆவது துணை தலைவராக (அதிபராக) கமலா டி.ஹாரிஸ் பொறுப்பு ஏற்று இருக்கிறார். இவர் அமெரிக்காவின் முதல் தெற்காசிய துணை தலைவர், அமெரிக்காவின் முதல் கருப்பு துணை தலைவர், முதல் பெண் துணைத் தலைவர் என்ற 3 சாதனைப் பட்டியலில் இடம்பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கின்னஸ் சாதனை பக்கம் அங்கீகரித்து உள்ளது.
அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபிடன் பதவி ஏற்றபோது, அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அந்தப் பதவி ஏற்பு விழாவில் கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் மற்றும் அவரது 2 மகள் உடன் இருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் மேலவை உறுப்பினராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போதே அமெரிக்க மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
அமெரிக்க அரசியல் வரலாற்றில் இனி, அமெரிக்க செனட்டின் தலைவராக டை வாக்குகளை உடைத்தல், ஒரு சிறந்த ஆலோசகராக மாறுதல், ஜனாதிபதியால் (அதிபர்) வழங்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவது, ஜனாதிபதி அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாத தருணத்தில் தான் அந்த பணியை நிறைவேற்றுவது போன்ற ஒரு உயரிய இடத்தில் அவர் பங்கு வகிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா மாகாணத்தின் ஆக்லாந்தில் பிறந்த இவர் ஹார்வேடு பல்கலை மற்றும் கலிபோர்னியா பல்கலையில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் என்பதால் ஆப்பிரிக்க- அமெரிக்க தொடர்பு, தாய் சியாமளா இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் இந்திய-அமெரிக்க தொடர்பு என இரட்டை பரிமாணத்தைக் கொண்டவர். மேலும் அமெரிக்காவில் ஒரு பெண்மணி இத்தனை உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை. எனவே கமலா டி.ஹாரிஸ் கின்னஸ் சாதனை பக்கத்தில் இடம் பிடித்து உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments