கமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவருக்கும் அவருடைய சகோதரருக்கும் நோய் வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தனது கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்த கமலஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என் மாவட்டச் செயலாளருக்கும், அவரின் இணைபிரியா சகோதரருக்கும்,
இது ஒரு நோய், நரகமல்ல! இதை வெல்வது உறுதி.
போலி அரசியல் பூசாரிகள், போக்கிடம் இல்லாமல் திரிவர். அவர் கூற்றுக்கு இரையாகாதீர்.
காலி இடம் நிரப்பவல்ல நாம்.
நாம் புத்துயிர்! புதிய உலகம்!
ஆதலால் நாளை நமதே.

இவ்வாறு கமல்ஹாசன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More News

கொரோனாவிற்கு பலியான ஸ்பெயின் நாட்டு இளவரசி

உலகம் முழுவதும் ஜாதி, மத, இன வேறுபாடின்றி ஏழை முதல் பணக்காரர்கள் வரை, சாமானியர் முதல் உலகத் தலைவர்கள் வரை கொரோனா வைரஸ் தாக்கி வருவது தெரிந்ததே.

அடுத்தடுத்து தந்தை-மகள் உயிர் பிரிந்த பரிதாபம்: கொரோனாவின் கோர முகம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பலியாகியுள்ள

இந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

சென்னை மாநகரில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆம்புலன்சை ஓட்டும் பணியில் உள்ள ஓட்டுனராக இருப்பவர் பாண்டித்துரை.

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

தமிழ் திரைப்பட நடிகையும் கிராம பாடல்களை பாடும் பாடகியுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83 

எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தது இந்திய மக்கள் கோடிக்கணக்கான பேர் வரலாற்றிலேயே முதல்முறையாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்