இசை பிரபலங்களுடன் இணைந்து கமல்ஹாசன் உருவாக்கிய 'நம்பிக்கை' பாடல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா விடுமுறை பல நட்சத்திரங்கள் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் கமல்ஹாசன், ‘மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு பாடலை எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை இசையுலக பிரபலங்கள் பலர் பாடியுள்ளனர்.
'அறிவும் அன்பும்' என்று தொடங்கும் இந்தப் பாடலை கமல் எழுத அதனை அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் என பல பிரபலங்கள் இணைந்து பாடியுள்ளனர். மகேஷ் நாராயணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலை திங்க் மியூஸிக் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதுகுறித்து திங்க் மியூசிக் நிறுவனம் கூறியபோது, "தற்போது நிலவுவது நம்ப முடியாத ஒரு சூழ்நிலை. இந்த புதிய வாழ்க்கை முறை பலரைச் சோதித்து வருகிறது. இதுபோன்ற காலகட்டத்தில், எல்லோரும் உணர்ச்சிகரமாக இருக்கும் வேளையில், அனைவரும் சக மனிதர்களை அன்புடனும், இரக்கத்துடனும் நடத்த வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம். இந்தப் பாடலை, என்றும் திறமையான கமல்ஹாசன் எழுதியுள்ளார். மற்ற திறமையான கலைஞர்கள் அதன் அழகை உணர்ந்து பாடியுள்ளனர். இது கேட்கும் அனைவரின் இதயத்தையும் தொடும் என்பது உறுதி" என்று தெரிவித்துள்ளது. இந்த பாடல் ஏப்ரல் 23-ம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments