இசை பிரபலங்களுடன் இணைந்து கமல்ஹாசன் உருவாக்கிய 'நம்பிக்கை' பாடல்!

கொரோனா விடுமுறை பல நட்சத்திரங்கள் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் கமல்ஹாசன், ‘மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு பாடலை எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை இசையுலக பிரபலங்கள் பலர் பாடியுள்ளனர்.

'அறிவும் அன்பும்' என்று தொடங்கும் இந்தப் பாடலை கமல் எழுத அதனை அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் என பல பிரபலங்கள் இணைந்து பாடியுள்ளனர். மகேஷ் நாராயணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலை திங்க் மியூஸிக் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதுகுறித்து திங்க் மியூசிக் நிறுவனம் கூறியபோது, தற்போது நிலவுவது நம்ப முடியாத ஒரு சூழ்நிலை. இந்த புதிய வாழ்க்கை முறை பலரைச் சோதித்து வருகிறது. இதுபோன்ற காலகட்டத்தில், எல்லோரும் உணர்ச்சிகரமாக இருக்கும் வேளையில், அனைவரும் சக மனிதர்களை அன்புடனும், இரக்கத்துடனும் நடத்த வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியது முக்கியம். இந்தப் பாடலை, என்றும் திறமையான கமல்ஹாசன் எழுதியுள்ளார். மற்ற திறமையான கலைஞர்கள் அதன் அழகை உணர்ந்து பாடியுள்ளனர். இது கேட்கும் அனைவரின் இதயத்தையும் தொடும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளது. இந்த பாடல் ஏப்ரல் 23-ம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

More News

புற்றுநோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த தமிழ் நடிகை

தமிழ் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி பிரபலமான டிடி என்ற திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது சமூக வலைப்பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்து தனது

தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் மட்டும் 55!

தமிழகத்தில் கொரொனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்கள் 26 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்

தமிழ் நடிகரின் கண்ணீர் வீடியோவை அஜித்திடம் சேர்த்த ராகவா லாரன்ஸ்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கோலிவுட் திரையுலகில் நலிந்த நடிகர்கள் பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்: பிரபல ஹீரோ பாராட்டு

நேற்று சென்னையில் கொரோனாவால் பலியான மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தியதும் அதன் பின்னர் போலீசார் தலையிட்டு போராட்டம் நடத்திய 20 பேரை கைது

கொரோனா நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சீனா!!! தக்கப் பதிலடி கொடுத்த இந்தியா!!!

கொரோனா கோரத் தாண்டவத்தில் இருந்து தற்போது சீனா மீண்டு வந்திருக்கிறது.