தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!
- IndiaGlitz, [Tuesday,April 14 2020]
இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடி வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தையும் சற்றுமுன் அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ்புத்தாண்டு வாழ்த்து குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘இது எப்படி முடிந்தது’ என்று உலகே வியக்கும் கட்டிடக்கலைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவ்வையின் சொற்பொழிவான ‘ஊக்கமது கைவிடேல்’ என்பதை பின்பற்றி இருந்தால் வரும் நாட்கள் நமதாகட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு புதியதொரு ஆரம்பமாகவும், ஆரோக்கியமான ஆண்டாகவும் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதேப்போல் அம்பேத்கர் பிறந்த நாள் குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ, இனத்தாலோ, மொழியாலோ, தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது. அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே’ என்று கூறியுள்ளார்.
வரும் நாட்கள் நமதாகட்டும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். #நம்பிக்கையுடன்நாம் #நம்பிக்கையின்ஆண்டாகட்டும்#நாளைநமதே#MakkalNeedhiMaiam pic.twitter.com/JbVqEKXeVP
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 13, 2020
இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ,இனத்தாலோ, மொழியாலோ,தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது.அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே.
— Kamal Haasan (@ikamalhaasan) April 14, 2020