கம்யூனிஸ்ட் கட்சியின் விழாவுக்கு கமல் வாழ்த்து

  • IndiaGlitz, [Wednesday,September 13 2017]

கமல்ஹாசன் மிக விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்தோ அல்லது ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியிலோ இணைந்தோ மிக விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் சிபிஎம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக வதந்தி எழுந்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதனை தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் சிபிஎம் கட்சியின் விழா ஒன்று நடைபெறவுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெறவுள்ள சிபிஎம் கட்சி விழாவில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், தான் அக்டோபர் இறுதி வரை சனிக்கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதாகவும் தெரிவித்த கமல், இருப்பினும் சிபிஎம் கட்சியின் விழாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். 

கம்ப்யூனிஸ்ட் கட்சியில் கமல் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் அந்த கட்சியின் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தது மேலும் ஊகங்களை அதிகரித்துள்ளது.

More News

விஷாலின் 'துப்பறிவாளன்' ஒரு முன்னோட்டம்

50 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழில் துப்பறியும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஜெயசங்கரின் 'சிஐடி சங்கர், வல்லவனுக்கு வல்லவன் முதல் கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' வரை

தமிழ்கன் அட்மின் பிடிபட்டது எப்படி?

ஆன்லைன் பைரஸி குற்றவாளிகளை பிடிப்பதே தனது முதல் வேலை என்றும், ஆறு மாதத்திற்குள் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றும் விஷால் சூளுரைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே

தமிழ்கன் அட்மின் அதிரடி கைது

தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது தமிழ் ராக்கர்ஸ்களே தயாராக இருங்கள், உங்களை கண்டுபிடித்து காட்டுகிறேன் என்று விஷால் சவால் விட்டார்.

சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் சூப்பர் ஹிட் தென்னிந்திய படம்

இதுவரை அமீர்கானின் '3 இடியட்ஸ்', 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற திரைப்படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு அந்நாட்டில் பிரமாண்டமாக ரிலீஸாகி நல்ல வசூலை பெற்றது என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம்

சேலம் தம்பதிக்கு காஜல் அகர்வால் பெயரில் ஸ்மார்ட் கார்ட்

ரேசன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட்கார்ட் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த ஸ்மார்ட்கார்டுகளில் பல்வேறு குழப்பங்கள் இருந்ததாகவும்