'வாடி போடீ', 'வாடா போடா', மரியாதை தெரியாத அசீம்.. சாட்டையை சுழற்றுவாரா கமல்?

ஒட்டுமொத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களில் மிகவும் மோசமான போட்டியாளராக இந்த சீசனின் அசீம் பெயர் எடுத்து விடுவாரோ என்று எண்ணம் அவரது நடத்தையில் இருந்து தெரியவருகிறது. 

பெண் போட்டியாளர் என்று, பாராமல் ஆயிஷாவை போடி என கூறியதிலிருந்து அவரது தரமற்ற குணம் வெளியே வந்துவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து இன்னொரு போட்டியாளரான விக்ரமனுடன் அசீம் சண்டை போடும் போது அவரையும் போடா என்று கூறுவது அசீம் இயல்பிலேயே ஒரு தரம் தாழ்ந்தவரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு அநாகரிகமான போட்டியாளரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டதாக பெரும்பாலான நெட்டிசன்கள் அசீம்  குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தினம் கமல்ஹாசன் சாட்டையை சுழற்றி அசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. பேருந்தில் செல்லும் போது ஜாலியாக நடந்த ஒரு நிகழ்ச்சியை கூறிய  நடிகர் சரவணன் பெண்களை இழிவு செய்து விட்டதாக உடனே நிகழ்ச்சியில் இருந்து வெளியே தள்ளிய பிக்பாஸ், பெண்களிடம் அவமரியாதையாக போடி என நேருக்கு நேர் பேசும் அசீம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


 

More News

பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்: 55 வயது நடிகரின் திருமணம் குறித்து பிக்பாஸ் காஜல்!

55 வயதான நடிகர் ஒருவர் 25 வயது பெண்ணை திருமணம் செய்த நிலையில் இந்தத் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

7 வருடங்களுக்கு முன்பே நயனை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விக்கி: வைரல் வீடியோ

நயன்தாராவை ஏழு வருடங்களுக்கு முன்பே விழுந்து விழுந்து சிரிக்க வைத்த விக்னேஷ் சிவனின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

புதுக்கார் வாங்கிய ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்!

நடிகர் விஷாலின் தீவிர ரசிகரும் அறிமுக நடிகருமான ஒருவர் புதிய கார் வாங்கியதை அடுத்து அந்த காரை விஷாலிடம் காட்ட வந்த போது அவருக்கு விஷால் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் தற்போது

டேஞ்சர் ஜோனில் 4 போட்டியாளர்கள்.. இந்த சீசனின் முதல் எலிமினேஷன் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெற உள்ளதை அடுத்து பார்வையாளர்கள் மத்தியில் முதல் நபராக வெளியேற்றப்படுவது

'போடீ...' ஆயிஷாவிடம் எல்லை மீறிய ஆண் போட்டியாளர்: பிக்பாஸ் நடவடிக்கை எடுப்பாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர் ஒருவர் ஆயிஷாவை பார்த்து 'போடீ...' என கூறியதை அடுத்து பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?