'வாடி போடீ', 'வாடா போடா', மரியாதை தெரியாத அசீம்.. சாட்டையை சுழற்றுவாரா கமல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒட்டுமொத்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களில் மிகவும் மோசமான போட்டியாளராக இந்த சீசனின் அசீம் பெயர் எடுத்து விடுவாரோ என்று எண்ணம் அவரது நடத்தையில் இருந்து தெரியவருகிறது.
பெண் போட்டியாளர் என்று, பாராமல் ஆயிஷாவை போடி என கூறியதிலிருந்து அவரது தரமற்ற குணம் வெளியே வந்துவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து இன்னொரு போட்டியாளரான விக்ரமனுடன் அசீம் சண்டை போடும் போது அவரையும் போடா என்று கூறுவது அசீம் இயல்பிலேயே ஒரு தரம் தாழ்ந்தவரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு அநாகரிகமான போட்டியாளரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டதாக பெரும்பாலான நெட்டிசன்கள் அசீம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய தினம் கமல்ஹாசன் சாட்டையை சுழற்றி அசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. பேருந்தில் செல்லும் போது ஜாலியாக நடந்த ஒரு நிகழ்ச்சியை கூறிய நடிகர் சரவணன் பெண்களை இழிவு செய்து விட்டதாக உடனே நிகழ்ச்சியில் இருந்து வெளியே தள்ளிய பிக்பாஸ், பெண்களிடம் அவமரியாதையாக போடி என நேருக்கு நேர் பேசும் அசீம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#Day12 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/LtjwX1zi7i
— Vijay Television (@vijaytelevision) October 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com