கமல்ஹாசன் சந்திக்கும் 3வது முதல்வர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,September 23 2017]

உலகநாயகன் கமல்ஹாசனின் அரசியல் ஆட்டம் ஆரம்பமான நாளில் இருந்தே தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பு பற்றி கொண்டது.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை மரியாதை நிமித்தம் ஓணம் தினத்தில் சந்தித்த கமல், அதன் பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு தனது வீட்டில் மதிய விருந்தளித்து அவரிடமும் அரசியல் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.

இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களையும் கமல் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், வெகுவிரைவில் அவருக்கு நேரம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல் சந்திக்கும் முதல்வர்கள் அனைவருமே மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.