கமல்ஹாசன் மேற்குவங்கத்திற்கு சென்றுவிடலாம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த கமல்ஹாசன், அதன் பின்னர் கொல்கத்தா சென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். அப்போது மம்தா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், அவருடைய கட்சி வேட்பாளர்களுக்காக தான் பிரச்சாரம் செய்ய போவதாகவும் கமல் தெரிவித்தார்.

தமிழகத்தில் எந்த ஒரு பெரிய கட்சியுடனும் கூட்டணி சேராத கமல்ஹாசன், தமிழகத்தில் இல்லாத ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'கமல்ஹாசன் அப்படியே மேற்கு வங்கத்துக்கு சென்றுவிட வேண்டியதுதான் என்று கூறினார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தோல்வி பயம் காரணமாகவே தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் தமிழகத்தில் கமல்ஹாசனுக்கு எந்த வேலையும் இல்லை என்றும், கமல் ஆரம்பித்த கட்சி சிரிப்பு படம் போன்றது' என்றும் ராஜேந்திர பாலாஜி காட்டமாக தெரிவித்தார்.