கமலஹாசன் நடிக்கும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்த ’தேவர்மகன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. கமலஹாசனே இயக்கும் இந்தப் படத்தில் வடிவேல் உள்பட ஒருசிலர் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கமலஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படமான ’வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ’ஜிப்ஸி’படத்தை பார்த்த கமல்ஹாசன், பட குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தபோது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் கௌதம்மேனன் ஆகியோர் கமலஹாசனை சந்தித்து பேசியுள்ளனர். ‘வேட்டையாடு விளையாடு 2’ படம் குறித்து தான் இவர்கள் மூவரும் பேசியதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்பதால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கமல் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

CAA சட்டத்திற்கான விவாதத்தில் தெலுங்கானா முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?!

இது போன்ற சட்டங்கள் எரிச்சலை வரவைக்கின்றன. இதனால் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் குறைகிறது.

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி..!

கோவையில் வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதனால் அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா கோரம்: டாய்லட் பேப்பருக்காக அடித்துக்கொண்ட வாடிக்கையாளர்கள் வைரலான வீடியோ!!!

கொரோனா மனித உயிர்களை எடுத்துக் கொள்வது மட்டுமின்றி அது ஏற்படுத்திய பீதியால் மனித நேயத்தையும்  கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க கள்ளச்சாராயம் குடித்த 27 பேர்களின் பரிதாப முடிவு

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க மது அருந்தலாம் என்ற வதந்தியை நம்பி ஈரானில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

அசுரன், பட்டாஸ் ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து தனுஷ் தற்போது 'ஜகமே தந்திரம்' மற்றும் 'கர்ணன்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார்.