நித்திரை கலைத்து நீரில் மூழ்குவதை தவிர்ப்போம்: கமல் மீண்டும் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே எண்ணூரில் உள்ள ஆபத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் எச்சரித்ததோடு, அந்த பகுதிக்கு நேரில் சென்றும் ஆய்வு செய்தார். இந்த நிலையில் சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுகள் நீரில் மூழ்க தயாராகி வருவதாகவும், நித்திரை கலைத்து நீரில் மூழ்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் மீண்டும் ஆட்சியாளர்களுக்கு எச்சரித்துள்ளார்
இதுகுறித்து கமல் கூறியதாவது: சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் உள்ள சேலையூர் ஏரி,கூடுவாஞ்சேரி, நந்திவரம், முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது என்று கூறிய கமல், நீர்நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது என்றும், நீர்வரத்து போதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது என்றும் தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாக் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மை என்றும் கூறியுள்ளார்
நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கு நீர்வரும் பாதையை மறித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டே உத்தரவிட்டும் இன்னும் அந்த உத்தரவு மீறப்பட்டே வருவதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் குரலெழுப்ப வேண்டும் என்றும் ஊடகங்களும் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த எச்சரிக்கையையும், வேண்டுகோள்களையும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments