50 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை: 'விக்ரம்' படப்பிடிப்பு குறித்து கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்பதும், இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து கமல்ஹாசன் சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் ‘விக்ரம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது ஒரு உயர் நிலை பள்ளியில் மீண்டும் இணைந்தது போல உணர்ந்தேன் என்றும், கடந்த 50 ஆண்டுகளில் நான் திரைப்பட படப்பிடிப்பில் இருந்து விலகி இருந்த மிக நீண்ட காலம் இதுதான் என்றும், நான் மட்டுமின்றி பல திரைப்பட தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்தவித படப்பிடிப்பையும் நடத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் எனது சக தோழர்கள் அனைவரையும் எங்கள் நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் படப்பிடிப்பில் பணிபுரிய அன்புடன் வரவேற்கிறேன் என்றும், குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது உற்சாகமான குழுவினர் மற்றும் திறமையான நடிகர்களாகிய விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர்களை வரவேற்கிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார். மேலும் கமல் பதிவு செய்த படப்பிடிப்பு குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
I welcome all my comrades from all echelons back to work at RKFI. Especially Mr.Lokesh and his enthusiastic team and my talented brothers, Mr.Vijay Sethupathi and Mr. Fahadh Faasil. (2/2)@RKFI @Dir_Lokesh @VijaySethuOffl
— Kamal Haasan (@ikamalhaasan) July 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com