ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சற்று முன் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:
வெகு சில பெரும் கலைஞர்களுக்கு மட்டுமே தாம் வாழும் காலத்திலேயே அவரது திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் திரு எஸ்பிபி அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் நினைத்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் நனைந்த மழையில் கொஞ்சத்தை நானும் பகிரங்க அனுமதித்த அண்ணனுக்கு எனது நன்றிகள் அவரின் குரலில் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர் ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்!
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு.
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2020
ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும். pic.twitter.com/9P4FGJSL4T
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments