ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்: கமல்ஹாசன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சற்று முன் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:

வெகு சில பெரும் கலைஞர்களுக்கு மட்டுமே தாம் வாழும் காலத்திலேயே அவரது திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் திரு எஸ்பிபி அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் நினைத்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவர் நனைந்த மழையில் கொஞ்சத்தை நானும் பகிரங்க அனுமதித்த அண்ணனுக்கு எனது நன்றிகள் அவரின் குரலில் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர் ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்!

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

தமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!!

பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் புதிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும்

எஸ்பிபி மரணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார்.

பாடகர் எஸ்பிபி காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்றிரவு முதல் கவலைக்கிடமாக இருந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

பள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா??? வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்!!!

பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கும் மத்திய அரசு புதிய வரி விதிப்பைக் கொண்டு வரப்போவதாகச் ஒரு அறிக்கை கடந்த தினங்களாக சமூக வலைத்தளங்களில்

ரயில் தண்டவாளத்திலேயே தூங்கி 2 ஆவது நாளாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம்…

மத்திய அரசு சில தினங்களுக்குமுன் விவசாயத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திருத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களவை