சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். இண்டர்நெட் துண்டிப்பு குறித்து கமல்
- IndiaGlitz, [Thursday,May 24 2018]
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் மற்றும் நேற்று ஏற்பட்ட வன்முறையால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்றும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பாதால் பதட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் நெல்லை, குமரி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. கலவரம் குறித்த் செய்திகள் பரவாமல் இருக்கவும், சமூக வலைத்தளங்கள் மூலம் போராட்டக்காரர்களை ஒருங்கிணைப்பை தடுக்கவும் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இண்டர்நெட் சேவை நிறுத்தத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!! என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து கொண்ட சென்னை நீதிமன்றம் இன்று பிற்பகலில் விசாரணை செய்யவுள்ளது.