மெர்சலுக்காக குரல் கொடுத்த கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்பு மட்டுமே பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் 'மெர்சல்' திரைப்படம் மட்டும் ரிலீசுக்கு முன்பும், பின்பும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள் சென்சார் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர்கள் இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமின்றி வழக்கு போடுவதாக மிரட்டவும் செய்கின்றனர். எதிர்க்கட்சிகளின் ஆதரவு மெர்சல் படக்குழுவினர்களுக்கு இருந்த போதிலும் சர்ச்சைக்குரிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல திரையுலகினர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 'தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட 'மெர்சல்' படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம். விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்துகளை முன்வைப்பவர்களை அமைதியாக்க முயற்சிக்க வேண்டாம். மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படும்போதுதான் இந்தியா ஒளிரும் என்று கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com