ஸ்டீபன் தந்த ஞானதானம்: கமல் பெருமிதம்
- IndiaGlitz, [Wednesday,March 14 2018]
இங்கிலாந்து நாட்டு இயற்பியல் விஞ்ஞானியும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த கடவுளின் துகள் என்று போற்றப்பட்டவருமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். அவருடைய இழப்பு உலக விஞ்ஞானத்திற்கே ஒரு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டீபனின் மறைவிற்கு உலகம் முழுவதிலும் உள்ள பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் தனது டுவிட்டரில் மறைந்த விஞ்ஞானிக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: திரு.ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம் .அவர் புகழ் வாழும். என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்டீபனின் மறைவிற்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது