இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை: ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல்
- IndiaGlitz, [Sunday,February 25 2018]
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முன்னணி திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்து பொருத்தமான திரை ஜோடி என்ற பெயர் உண்டாக காரணமானவர் உலகநாயகன் கமல்ஹாசன். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்த 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், தாயில்லாமல் நானில்லை, குரு, வறுமையின் நிறம் சிகப்பு, சங்கர்லால், மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மறைவு குறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.
மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2018