இதைவிட பெரிதாக செய்வோம்: சிவாஜி விழா குறித்து  கமல்

  • IndiaGlitz, [Monday,October 02 2017]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளான நேற்றைய தினம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டிருந்த சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா சிறப்பாக நடந்தது, இந்த விழாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர்களும் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிவாஜியின் பெருமை குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்தது இந்த விழாவின் ஹைலைட்டாக இருந்தது.

இந்த நிலையில் இந்த விழா குறித்து கமல் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, 'செவாலியே சிவாஜி மணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப் பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு' என்று பதிவு செய்துள்ளார்.

சிவாஜி மீது மிகுந்த அன்பு வைத்து அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறிவிட்ட கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து வெற்றி பெறுகிறாரோ இல்லையோ நிச்சயம் சிவாஜியின் நினைவை போற்றும் வகையில் பெரிதாக ஏதாவது செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.