மன்னிப்பு கேட்க சொல்வதுதான் ஜனநாயகமா? 'சர்கார்' விவகாரம் குறித்து கமல்

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததை அடுத்து அந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ,இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அரசின் இலவச பொருட்களை விமர்சனம் செய்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகள் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பிரமாண பத்திரம் எழுதி தரவேண்டும் என்றும் வாதாடப்பட்டது. இன்றைய விசாரணையில் முருகதாஸ் நிலை குறித்து தெரியவரும்.

இந்த நிலையில் அரசின் மன்னிப்பு கோரிக்கைக்கு நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'சர்கார்' திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாகவும், தோற்கடிக்கப்பட்ட பாஸிசம் மீண்டும் தலைதூக்குவதாகவும், இது ஜனநாயக முறையல்ல என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

More News

2.0 படம் குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இந்தியாவின் பிரமாண்டமான

'2.0' ரசிகர் மன்ற காட்சி கிடையாது: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வரும் 29ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

ஜானுவுக்கு பாட்டு சொல்லி கொடுத்த ஜானகி: 96 படத்தில் இடம்பெறாத அற்புதமான காட்சி

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பாராட்டாதவர்களே இல்லை

'2.0' திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்: திடீர் மனுவால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கப்பட்டு

ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது,. இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்கள் அவமரியாதை செய்யப்படுவதாக