உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்: ராணுவ வீரர் பழனி மறைவு குறித்து கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 3 இந்திய வீரர்களும் 5 சீன வீரர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தரப்பில் உயிரிழந்த 3 வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 22 வருடங்களாக நாட்டிற்காக ராணுவத்தில் பணிபுரிந்த பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார் என்ற சோகச்செய்தி வெளிவந்ததும் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பழனியின் குடும்பத்தினருக்கு சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் மற்றும் உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பழனியின் மறைவு குறித்து கூறியதாவது:
எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.

— Kamal Haasan (@ikamalhaasan) June 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments