உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்: ராணுவ வீரர் பழனி மறைவு குறித்து கமல்

  • IndiaGlitz, [Tuesday,June 16 2020]

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 3 இந்திய வீரர்களும் 5 சீன வீரர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தரப்பில் உயிரிழந்த 3 வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 22 வருடங்களாக நாட்டிற்காக ராணுவத்தில் பணிபுரிந்த பழனி என்பவர் வீரமரணம் அடைந்தார் என்ற சோகச்செய்தி வெளிவந்ததும் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் பழனியின் குடும்பத்தினருக்கு சமூக வலைதளம் மூலம் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் மற்றும் உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பழனியின் மறைவு குறித்து கூறியதாவது:

எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.

More News

'அய்யப்பனும் கோஷியும்' பட இயக்குனருக்கு ஏற்பட்ட திடீர் பிரச்சனை

கொரோனா வைரஸ் லாக்டவுன் அறிவிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்'. சுமார் 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரூபாய் 60 கோடிக்கு மேல்

தனுஷூக்கு இருந்த பிரச்சனை சுஷாந்த் சிங்கிற்கு இருந்ததா? பிரபல எழுத்தாளர் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே குலுக்கியது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை

உறவினரின் வளைகாப்புக்கு புதுவை சென்று வந்த சென்னை நபர் கொரோனாவுக்கு பலி!

புதுவையில் உள்ள உறவினர் வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது 

லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலி: 11 வீரர்கள் காயம் என தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த தாக்குதல் ஒன்றில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தியையும் அதில் ஒருவர் இராணுவ அதிகாரி

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் தமிழர்: அதிர்ச்சி தகவல்

இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு திடீரென சீன துருப்புகள் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணம்