மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்
- IndiaGlitz, [Monday,August 03 2020]
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை என்ற அம்சத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடித்து வரும் நிலையில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க கூடாது என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதனையடுத்து இன்று காலை அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் மும்மொழி கொள்கை கடைப்பிடிக்கப்படாது என்றும் உறுதியளித்தார். இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சியினர் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததற்கு உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது.
— Kamal Haasan (@ikamalhaasan) August 3, 2020
அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்.