என் தனிப்பட்ட இழப்பும் கூட: மேஜர்தாசன் மறைவு குறித்து கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Sunday,July 12 2020]

தமிழ் திரையுலகின் மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். அவருடைய மறைவு பத்திரிகையுலகிற்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

குறிப்பாக கடந்த 2002ஆம் ஆண்டு கமல்ஹாசனை அடுத்து மேஜர்தாசன் அவர்களும் உடல்தானம் செய்தார் என்பதும், கமல்ஹாசன் முன்னிலையில் தனது உடல்தான பத்திரத்தை மருத்துவ கல்லுரி மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை நினைவு கூர்ந்து மேஜர்தாசன் அவர்களின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த உலக நாயகன் கமல்ஹாசன், ‘மண்ணுக்குள் செல்லும் உடம்பு மாணவர்கட்கு பயன்படட்டும் என்று என் உடலை தானம் செய்ய முடிவெடுத்து அறிவித்த போது தன் உடலையும் தானம் செய்ய முன்வந்த மூத்த பத்திரிக்கையாளர் மேஜர்தாசன் அவர்களின் மறைவு, என் தனிப்பட்ட இழப்பும் கூட. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.
 

More News

எப்பொழுதும் பாடல்களில் அவர் தான் ராஜா: நா முத்துகுமார் மகனின் கவிதை

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான நா.முத்துகுமார் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது பிறந்த நாள் இன்று திரையுலகினர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐஸ்வர்யாராயுடன் நடித்த 36 வயது நடிகர் திடீர் மரணம்

பாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ஆகிய முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒரு மில்லியனுக்காக நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகன், வில்லன், குணசித்திரம் உள்பட அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறி விடுவார்

அமிதாப் குடும்பத்தை அடுத்து அனுபம்கெர் குடுபத்தில் நால்வருக்கு கொரோனா!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தில் உள்ள அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகிய நால்வருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை

ஐஸ்வர்யாராய், ஆராதனாவுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரனோ பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்