தீவிர ரசிகரை 'மகனே' என அழைத்த கமல்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கும் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் வசனங்களை அவர்களது ரசிகர்கள் பேசுவதும் பாடுவதுமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த 1989ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’அண்ணாத்த ஆடுறார்’ என்ற பாடலை கமல் போன்றே வேடமிட்டு ரசிகர் ஒருவர் நடனமாடி அது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டே இந்த நடனத்தை ஆடி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 31 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தனது ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தனது தீவிர ரசிகர் ஒருவர் நடனமாடிய வீடியோவை பார்த்த கமல்ஹாசன் அவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ‘மகனே’ என அழைத்து ஒரு அப்பனாக பெருமைப்படுவதாக கூறியுள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!
கமல்ஹாசனின் இந்த டுவிட்டும், ரசிகரின் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! https://t.co/xDfE7PW7Z0
— Kamal Haasan (@ikamalhaasan) June 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments