தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி: டாஸ்மாக் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கமலஹாசன் தனது சமூக வலைப்பக்கத்தில் தனது கண்டனங்களை தெரிவித்து வந்தார்.

மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மக்கள் நீதி மய்யம் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் செய்த கட்சிகளுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா???

கொரோனா வைரஸ் பரவல் உலக மக்களை கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவிந்த கூட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டாஸ்மாக் கடைகளில் சமூக விலகலை பின்பற்ற வேண்டும்

தமிழகத்தில் புதிதாக கொரோனாவுக்கு 600 பேர் பாதிப்பு: 6000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று பாதிப்படைந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

கிரேஸி மோகன் காமெடியை ரிப்பீட் செய்த விஜய்சேதுபதி மீது காவல்துறையில் புகார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கடவுள் குளிப்பதை காட்டுகிறார்கள்,

கொரோனா தடுப்பூசி:  இறுதிக்கட்ட சோதனையை நடத்திவரும் நாடுகள்!!! நிலவரம் என்ன???

கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சிகள் உலக நாடுகளால் விரைப்படுத்தப் பட்டிருக்கின்றன.