அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்றுமுன் தினம் கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த மரணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று பெரும்பாலான திரையுலகினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்னும் பெரிய நடிகர்கள் இதுகுறித்து குரல் கொடுக்கவில்லையே என்ற அதிருப்தியும் நிலவி வந்தது.
குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் சமூக அவலங்கள் குறித்து உடனுக்குடன் தனது டுவிட்டரில் காரசாரமாக பதிவு செய்யும் கமல்கூட இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதாக கூறப்பட்டது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூட நேற்று இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் சற்றுமுன்னர் கமல் இதுகுறித்து தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
கமல் தனது டுவிட்டரில் கூறியதாவது: கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்
கந்துவட்டி கொடுமை குறித்து கமல் பொதுவாக கருத்து கூறியிருப்பதாகவும், அன்புச்செழியன் குறித்து ஒரு வார்த்தை கூட அவரது டுவிட்டில் இல்லையென்றும் டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com