அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்றுமுன் தினம் கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த மரணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று பெரும்பாலான திரையுலகினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்னும் பெரிய நடிகர்கள் இதுகுறித்து குரல் கொடுக்கவில்லையே என்ற அதிருப்தியும் நிலவி வந்தது.

குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் சமூக அவலங்கள் குறித்து உடனுக்குடன் தனது டுவிட்டரில் காரசாரமாக பதிவு செய்யும் கமல்கூட இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பதாக கூறப்பட்டது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூட நேற்று இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் சற்றுமுன்னர் கமல் இதுகுறித்து தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

கமல் தனது டுவிட்டரில் கூறியதாவது: கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்

கந்துவட்டி கொடுமை குறித்து கமல் பொதுவாக கருத்து கூறியிருப்பதாகவும், அன்புச்செழியன் குறித்து ஒரு வார்த்தை கூட அவரது டுவிட்டில் இல்லையென்றும் டுவிட்டர் பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

டுவிட்டர் முன்னேற்ற கழகம்: கமல் கட்சிக்கு பெயர் செலெக்ட் செய்த எச்.ராஜா

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் தைரியமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமூக அக்கறையுடன் அவர் தெரிவித்து வரும் கருத்துக்கள்

அன்புச்செழியன் உத்தமர்: அவரை தவறாக சித்தரிக்க வேண்டாம்: பிரபல இயக்குனர்

அன்புச்செழியன் மிரட்டல் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இறந்ததாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக திரண்டு அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்

ரூ.20 லட்சம் கடனுக்காக ரூ.7 கோடி வீட்டை இழந்த பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்

கந்துவட்டி கொடுமையால் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் அவரை போல இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி கொடுமையை அனுபவித்ததாக தெரிய வருகிறது

அசோக்குமாரிடம் எந்தவித பண வரவு-செலவும் இல்லை: கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விளக்க அறிக்கையை கொடுத்துள்ளது.

கந்துவட்டி தற்கொலை இரண்டு நாள் செய்தி மட்டுமே: டாக்டர் ராம்தாஸ்

கந்துவட்டி கொடுமையால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் காரணமாக இன்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.