வெளியே வா பாத்துக்கலாம்: யாஷிகா-ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனவுடன் இந்த மூணு பேரையும் கல்லால் அடிக்க வேண்டும் என்று விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஜனனியை குறிப்பிட்டார். அதற்கு ஐஸ்வர்யா, 'நான் கையில் என்ன கிடைத்தாலும் எடுத்து அடிப்பேன்' என்று கூறினார். இதனை கேட்டு யாஷிகா சிரித்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் 'சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வெளியே சென்று ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களோ என்ற பயம் எனக்கு இருக்கு. ஏனென்றால் வெளியே சென்று இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வார்கள் என்று கூறி யாஷிகா, ஐஸ்வர்யாவை பார்த்து சிரித்தார். மேலும் மக்களும் அதையே சொல்லி கொண்டிருக்கின்றார்கள் என்று இருவரையும் கலாய்த்தார்.
ஏனெனில் நேற்றும் இன்றும் டுவிட்டரில் பலர், ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் வெளியே வந்தால் அவர்களை கல்லால் அடிப்போம் என்றும், அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பயங்கரமாக விமர்சனம் செய்வோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
???? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/miZ4xaiW8K
— Vijay Television (@vijaytelevision) September 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments