'நீங்க அடுத்த சி.எம்-க்கு வண்டி ஓட்றீங்க: கமல் சென்ற பேருந்தில் கலகல...
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரண்டாவது முறையாக டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். அப்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள உள்புற கிராமங்களுக்கு சென்ற அவர், அங்கு இன்னும் யாரும் வந்து எந்தவித உதவியும் செய்யாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இதுகுறித்து அவர் காட்டமாக ஒருசில கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஒரு கிராமத்தில் இருந்து அரசு பேருந்தில் கமல் பயணம் செய்தார். கண்டக்டரிடம் தனக்கும் தன்னுடன் பயணிப்பவரகளுக்கும் டிக்கெட் வாங்கிய அவர், பின்னர் டிரைவரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது டிரைவர் நீங்க நம்ம பஸ்ஸில வருவதானலதான் பாதுகாப்பா இருக்கிங்க என்று கூற கமல் அதற்கு சிரித்தார்.
அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு பயணி, 'அடுத்த சி.எம். நம்மாள்தான், நீங்க அடுத்த சி.எம்.க்கு வண்டி ஓட்றிங்க' என்று கூற அதற்கு கமல், டிரைவர் உள்பட அனைவரும் சிரித்தனர். அரசு பேருந்தில் கமல் பயணம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தலைவர் வண்டில வர்ராறு.. நான் எப்டி ஓட்றேனு பாரு..
— World King Babu (@worldkingbabu) November 30, 2018
-- ஓட்டுநர்
அடுத்த C..M நம்மாளுதான்..
-பயணி#KamalHaasan #NammavarForDelta #NammavarInField pic.twitter.com/Bj0taLyWlV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com