இந்தியன் 2: மோடி மோசடியை கையில் எடுக்கின்றாரா கமல்?

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

இனிமேல் கமல்ஹாசனை உலக நாயகன் என்பது மட்டுமின்றி 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் என்றும் அவரது ரசிகர்கள் கூறலாம். அந்த அளவுக்கு நேற்று பிரமாண்டமாக தனது கட்சியின் தொடக்கவிழாவை அமைதியாக நடத்தி காட்டினார்.

கமல் கட்சியின் கொடி, கொள்கை ஆகியவை தென்னிந்தியாவையும், திராவிடத்தையும் குறிக்கும் வகையில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படம் தேசிய அளவில் நடந்த ஒரு ஊழலை வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலான கதை என்று கூறப்படுகிறது.

அதாவது கடந்த சில நாட்களாக நாட்டையே பரபரப்பாக்கியுள்ள ஒரு விஷயம் வங்கியில் ரூ.11500 கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய  நீரவ் மோடி என்ற தொழிலதிபர் தான். இந்த ஹாட்டான டாப்பிக் தான் ஷங்கரின் கைவண்ணத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள 'இந்தியன் 2' படத்தின் கதை என்று கூறப்படுகிறது. நீரவ் மோடியின் மோசடியை கையில் எடுக்க்கும் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படம் நிச்சயம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கடைக்குட்டி சிங்கம் டைட்டில் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

கார்த்தி நடிப்பில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் பாணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ரஜினியை ரகசியமாக சந்தித்தது எப்போது? கமல் விடுவித்த புதிர்

அரசியலுக்கு வருவது குறித்து ஆசான்களை சந்திப்பதற்கு முன்பே நண்பர் ரஜினிகாந்த் அவர்களை ரகசியமாக சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

13 வருடங்களுக்கு பின் கமல்-ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்களில் ரஜினியும் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்

கமல்ஹாசனுக்கு டி.என்.சேஷன் கொடுத்த மதிப்பு மிகுந்த டைட்டில்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது கட்சியின் கொள்கையையும் அறிவித்தார்.