close
Choose your channels

கமல் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்?

Wednesday, January 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' ரிலீஸ் ஆகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டபோதிலும் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல் ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் அமலா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி கமல்ஹாசனின் அடுத்த படமும் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படத்தின் கதை முற்றிலும் வித்தியாசமானது என்றும் இந்த படத்தில்தான் ஸ்ருதிஹாசன், கமல் மகளாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இசையமைக்க இசைஞானி இளையராஜாவை கமல் தரப்பு அணுகியுள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment