close
Choose your channels

கமல், அஜித், சூர்யா- தீபாவளிக்கு மோதும் நட்சத்திரங்கள்?

Monday, July 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் சிவா இயக்கத்தில் சீராக வளர்ந்துகொண்டிருக்கிறது. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் அண்மையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது, படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அஜித்தின் இந்த 56ஆவது படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

`மாசு` படத்துக்குப் பிறகு சூர்யா தன் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்து, முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் `24`. விக்ரம் குமார் இயக்கும் இந்தப் படம் வேகமாக வளர்ந்துவருகிறது. செப்டம்பரில் படப்பிடிப்பை முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் இதனால் படம் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகிவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்தில் கமல ஹாசன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் த்ரில்லர் படம் `தூங்காவனம்`. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது, இருந்தாலும் இரண்டு மாத இடைவெளியில் இரண்டு கமல் படங்கள் (`உத்தம வில்லன்`, `பாபநாசம்`) வெளியாகிவிட்டதால் `தூங்காவனம்` படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதே சரியாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுவதாகத் தெரிகிறது.

இந்தத் தகவல்களையும். பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பண்டிகை/தேசிய விடுமுறை தினங்களில்தான் வெளியிடப்பட வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் விதிமுறையையும் கணக்கில்கொண்டு இம்மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வாய்ப்பிருப்பதாக திரைத் துறை வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment