'விக்ரம்' வெற்றிக்கு நன்றியை கூட வித்தியாசமாக கூறிய கமல்: 5 வீடியோக்கள் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. கமல்ஹாசன் படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கொடுத்த படம் இதுதான் என்றும், இந்த படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் சாதனை படைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ’விக்ரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியானதை அடுத்து இந்த படத்தின் வெற்றிக்காக ஐந்து மொழிகளில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்து 5 வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அதில் தமிழ் மொழியில் அவர் கூறியிருப்பதாவது:
தரமான திரைப்படத்தை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான நடிகர்களையும் பாராட்டி வருவதில் தயங்கியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் 'விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.
இந்த படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் கிரிஷ் உள்பட பல தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது நியாயம்.
அதேபோல் திரு விஜய் சேதுபதி, திரு பகத் பாசில், திரு நரேன் உள்பட இந்த படத்தில் நடித்த நடிகர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகும். கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்புக்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் வகையில் அடுத்து நாங்கள் இணையும் படத்தின் எங்கள் நன்றியை காட்டி விடலாம் என்று இருக்கிறேன்.
இயக்குனர் திரு லோகேஷ் அவர்களுக்கு சினிமா மீதும், என் மீதும் இருக்கும் அன்பின் காரணமாக படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் படத்தை செதுக்கினார். ரசிகர்கள் உங்கள் அன்பு தொடரவேண்டும், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி தொடர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கமல் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022
With love ,
Kamal Haasan@ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @spotifyindia @SonyMusicSouth @RedGiantMovies_@actor_nithiin @anbariv @girishganges @philoedit pic.twitter.com/nZnB71r3dF
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022
With love ,
Kamal Haasan@ikamalhaasan @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @PenMovies @jayantilalgada @spotifyindia @SonyMusicSouth
@anbariv @girishganges @philoedit @ArtSathees @MrRathna pic.twitter.com/owSpxnpHpf
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022
With love ,
Kamal Haasan@ikamalhaasan @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @spotifyindia @SonyMusicSouth @actor_nithiin @SreshthMovies @anbariv @girishganges @philoedit @ArtSathees @MrRathna pic.twitter.com/W63PyzJxbi
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022
With love
Kamal Haasan @ikamalhaasan @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @shibuthameens @riyashibu_ @spotifyindia @SonyMusicSouth@actor_nithiin @anbariv @girishganges @philoedit @ArtSathees pic.twitter.com/UNtOf9S873
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 7, 2022
With love
Kamal Haasan @ikamalhaasan @Dir_Lokesh @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @spotifyindia @SonyMusicSouth @SKVFCS @anbariv @girishganges @philoedit @ArtSathees @MrRathna @gopiprasannaa pic.twitter.com/NkaTAzk2uz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments