கமல் களப்பணியால் கலெக்டர் அளித்த அதிரடி வாக்குறுதி

  • IndiaGlitz, [Saturday,October 28 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் இதுவரை டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்தவர் என்ற விமர்சனத்தை உடைக்கும் வகையில் இன்று களப்பணியில் இறங்கினார். சென்னை எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதரமாக விளங்கி வரும் அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுவதால் மழை காலத்தில் இந்த பகுதியில் வெள்ளம் வரும் வாய்ப்பு உள்ளதை நேற்றே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

அதுமட்டுமின்றி மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களும் நடு ஆற்றில் தங்கள் முனையங்களை அங்குள்ள மக்களின் எதிர்ப்பை மீறி கட்டியுள்ளதையும் கமல் இன்று ஆய்வு செய்தார்.

கமல்ஹாசனின் இந்த ஆய்வுக்கு பொன் ராதாகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்த நிலையில் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சுந்தரவல்லி அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

கலெக்டரின் இந்த வாக்குறுதிக்கு கமல் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, 'தானே முன்வந்து ஆவன செய்ய வாக்குறுதி தந்த ஆட்சியர் சுந்தரவல்லியார்க்கு எண்ணூர் குப்பத்துமக்கள் நன்றியோடு என் நன்றியும் சேரும். என்று கூறியுள்ளார். மேலும் இன்னொரு டுவீட்டில், 'சகோதரர் திருமாவளவன் மற்றும்  பொன்னார் போன்றோர்  எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என்  ஊக்கத்தை கூட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.