ராகுல்காந்திக்கு கமல் கற்று கொடுத்த பாடம் இதுதான்: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Monday,July 23 2018]

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதனையடுத்து இரண்டு கட்சிகளும் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆவேசமாக பிரதமர் மீதும், பாஜக அரசு மீதும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராகுல்காந்தி, பேசி முடித்ததும் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், சமீபத்தில் டெல்லி சென்ற கமல்ஹாசன், ராகுல்காந்திக்கு கட்டிப்பிடி வைத்திய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவரது கட்சியின் சாதனையாக உயர்மட்ட குழு என்பது தற்போது பொதுக்குழுவாக மாறியுள்ளது என்றும் கூறினார்.

மேலும் இதே கருத்தை பாஜகவின் எச்.ராஜா அவர்களும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.