close
Choose your channels

கமல், சூர்யா, கார்த்தி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் 'லியோ'? உறுதி செய்யப்பட்டுள்ளதா லோகேஷின் LCU?

Friday, October 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU படமா? என்பது குறித்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால் ’விக்ரம்’ படத்தில் LCU காட்சிகள் இருந்ததால் இந்த படத்திலும் LCU காட்சிகள் இருக்க அதிக வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது. மேலும் நேற்று ட்விட்டரில் ரசிகர்கள் மத்தியில் பேசிய தயாரிப்பாளர் லலித் அவர்கள் கூட ’இந்த படம் LCU படமா? என்பதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்க விரும்புகிறோம் என்றும் 19ஆம் தேதி தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் ’லியோ’ படத்திற்கான முன்பதிவு செய்யும் இணையதளங்களில் ஒன்று இந்த படத்தின் சுருக்கமான கதையை பதிவு செய்துள்ளது. அதில் இந்த படத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர் என்றும் இது ஒரு லோகேஷ் கனகராஜின் LCU படம் தான் என்றும் பதிவு செய்துள்ளது.

இதனை அடுத்து இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCU படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டாலும் 19ஆம் தேதி தியேட்டரில் இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment