த்ரிஷாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா பீட்டா ஆதரவாளர் என்பதால் அவரது படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் பிரச்சனை ஏற்பட்டதோடு, அவரது சமூக வலைத்தள பக்கங்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹேக்கர்கள் பதிவு செய்த ஒருசில டூவீட்டுக்கள் இந்த பிரச்சனையை மேலும் பெரிதாக்கி உள்ளது.
இந்நிலையில் த்ரிஷா தன்னுடைய சமூக வலைத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு சர்ச்சைக்குரிய டுவீட்டுக்களை சிலர் பதிவு செய்து வருவதாகவும், அந்த டுவீட்டுக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பதமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் த்ரிஷாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'த்ரிஷாவுக்கு எதிரான மோசமான விமர்சனங்களை தயவுசெய்து நிறுத்துங்கள். அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்' என்று கூறியுள்ளார்.
Pls stop hurting MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்
Pls stop hurting MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்
— Kamal Haasan (@ikamalhaasan) January 14, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com