திமுகவுக்கு திடீர் ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்

நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அதிமுகவை எந்த அளவுக்கு கமல் விமர்சனம் செய்தாரோ அதே அளவுக்கு திமுகவை விமர்சனம் செய்தார். இந்த நிலையில் தற்போது திமுக எடுத்த நடவடிக்கை ஒன்றுக்கு கமல்ஹாசன் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபால் அவர்களிடம் புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் திமுகவின் செயல்பாட்டுக்கு, கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

More News

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் வெளியான அந்த படத்தின் புரமோஷன் வீடியோவில்

திடீர் என நடுரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள்!

மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர், திடீர் என விஜய்யின் பேனர் ஒன்றை வைத்து, பாலபிஷேகம் செய்து, கீழே விழுந்து கும்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்...

த்ரிஷா பிறந்த நாளில் ஆரம்பமாகும் 'பரமபத விளையாட்டு'

தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் கதாநாயகியாக தாக்குப்பிடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. கடந்த 1999ஆம் ஆண்டு 'ஜோடி' படத்தில் அறிமுகமான த்ரிஷா 20 வருடங்கள் கழித்து

பணிந்தது பெப்சி: உருளைக்கிழங்கு வழக்கை வாபஸ் பெற முடிவு!

9 விவசாயிகளிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த அமெரிக்காவை சேர்ந்த பெப்சி நிறுவனம் அந்த வழக்கை வாபஸ் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கரையை கடக்க துவங்கியது ஃபானி: பலத்த காற்றுடன் கனமழை 

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று ஒடிஷாவில் கரையை கடக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே ஃபோனி புயல்