பிரதமர் மோடிக்கு ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியல்ரீதியாக பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கொரோனா விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
கொரோனா விழிப்புணர்வு குறித்து நேற்று பிரதமர் மோடி பேசியபோது வரும் 22ஆம் தேதி பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே ஒரு சுயகட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொண்டு அத்தியாவசியப் பணிகள் செய்பவர்கள் தவிர்த்து மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், 22-ம் தேதி வீட்டில் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்பவர்களுக்காக கைதட்டல் மூலம் நன்றி தெரிவியுங்கள்’ என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில், ‘கொரோனா விவகாரத்தில் நமது பிரதமரின் அழைப்புக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது நமக்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு என்பதால் அனைவரும் ஒற்றுமையாகவும் வீட்டிற்குள் இருப்பதன் மூலம், நாம் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.
மேலும் மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எனது ரசிகர்கள், எனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இதற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
I stand in full solidarity with our Prime Minister’s call for #JantaCurfew.
— Kamal Haasan (@ikamalhaasan) March 20, 2020
In this extraordinary situation, we have to take extraordinary measures.
It’s a disaster that has befallen on us and by staying united and indoors, we can Stay Safe. (1/2)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com