கமல் ஆரம்பித்துள்ள இணையதளத்தின் பெயர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,February 11 2018]

நடிகர் கமல்ஹாசன் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்று பல்வேறு ஊகங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று அவர் புதிய இணையதளம் ஒன்றை 'நாளை நமதே' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளார். கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே. இணைவதற்க்கு என்று இந்த இணையதளம் குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த இணையதளத்தில் தன்னார்வலர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இணையலாம் என்று கமல் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், சிஎஸ்ஈஆர், என்ஜிஓ, அடுக்குமாடி குடியிருப்பு என 4 பிரிவுகளில் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கல்வி, தொழில் சுற்றுச்சூழல், வேளாண் துறை, நீர் மேலாண்மை, உள்ளிட்ட துறைகளில் பதிவு செய்யலாம் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

http://naalainamadhe.maiam.com/ என்ற முகவரியில் இயங்கி வரும் இந்த இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர். கட்சி தொடங்குவதற்கு முன்னர் கமல் ஆரம்பித்துள்ள இந்த இணையதளம் பெரும் வரவேற்பினை பொதுமக்களிடையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

கலாச்சாரத்திற்கு எதிரானது: பாகிஸ்தானில் அக்சயகுமார் படத்திற்கு தடை

பெண்களுக்கு நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படமான 'பேட்மேன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

கட்சி ஆரம்பிக்கும் முன் கமல் சந்திக்கும் பிரபல தலைவர் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி இராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

விஜய்-அஜித் ரசிகர்களுக்கு சளைக்காமல் மோதிய மகேஷ்பாபு ரசிகர்கள்

விஜய், அஜித் ரசிகர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தற்போது நிரூபித்துள்ளனர்.

'பேட்மேன்' சவாலை ஏற்றுக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்

அக்சயகுமார் நடிப்பில் உருவான நாப்கின் குறித்த விழிப்புணர்வு திரைப்படமான 'பேட்மேன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

2.0வை முந்தியதா காலா: ரிலீஸ் தேதி இதோ:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்த 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில்