செய்யுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள்: திருச்சி மாநாட்டில் கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
காவிரிப் பிரச்னையை மய்யம்கொள்ளும் இடமாக இந்த மேடை இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்து வருகிறது. மத்தியில் நடக்கும் அரசை நீங்கள் குற்றம் சாட்டவில்லையே எனக் கேள்வி எழுப்புகின்றனர். மத்திய அரசு செய்வது தவறு. இதுக்கு மேல் எப்படி அழுத்தமாகக் கூற முடியும்? இதற்கு மேல் கூறினால் அவமரியாதை செய்வதுபோல ஆகிவிடும். மக்கள் நீதி மய்யம், ஒருநாளும் மற்றவர்களை அவமதிக்காது.
நாசமாய்ப் போன அரசியல் மாண்பை மீட்டெடுப்பதே என் கனவு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதை திசைதிருப்ப முயலாதீர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். சுதந்திரத்திற்காக நாம் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தோம். அது உலகிற்கே முன்மாதிரியான இயக்கம். மத்திய அரசுக்கு நாங்கள் சொல்லிக் கொள்வது இதுதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், அமைதியான முறையில் தமிழகம் உங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கும். ஜாக்கிரதை என்றெல்லாம் மிரட்ட மாட்டேன். வேண்டாம் எனக் கூறுகிறேன். கம்பெடுத்து வீடு கட்டி, தொடை தட்டுவதுதான் வீரம் என்றில்லை. வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை.
அரிசி தவிர வேறு தானியம் நாங்கள் உண்பதில்லை. நம்மைப் போலவே அவர்களும் முன்னோக்கிச் செல்பவர்கள்தான். எல்லாரும் பிரச்னை பற்றிப் பேசுகிறார்கள். இதெல்லாம் நியாயமான விவாதங்கள்தான். மக்கள் நீதி மய்யம் நிறைய அறிஞர்களிடம் பேசி, தீர்வை நோக்கிச் செல்கிறது. அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். அந்தத் தீர்வை நோக்கிச் செல்ல, தமிழக அரசு நகர மறுக்கிறது. காவிரி நீருக்காகக் கெஞ்சும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். மத்திய அரசின் முதுகில் ஒளிந்து கொள்கிறது தமிழக அரசு. நீங்கள் செய்யுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள். செய்வதற்கு எங்களிடம் ஆள்கள் இருக்கிறார்கள். மய்யம்னா என்ன? நடுவில் நிற்பதா? நல்லவர்களிடம் நிச்சயம் சேருவோம். நிச்சயம் நல்லவர்கள் பக்கமே சாய வேண்டும் என்பது எங்களின் திண்ணமான முடிவு’’
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments